சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

“விளையாட்டு”

விளையாடி மகிழ்ந்திடுவோம் பொழுது என்றும் வீணாகிப் போவதில்லை.
உள்ளமும் உவகை பெறும் உடலும் புத்துணர்ச்சி அடையும்.
கூடி விளையாடுவோம் கோபத்தை மறந்திடுவோம்.
உடல் வியர்க்க விளையாட அசுத்தங்கள் யாவும் அதனுடன் நீங்கும்.

விளையாடித்திரிதல் தீது, ஓரிடத்தில் அமர்ந்துபட,கண்டிக்கும் பெற்றோர்
விளையாட்டின் மகிமை அறியார் ,அறியாமை இருளில் நிற்பார்.
நாகரீகத்தின் தோற்றத்தோடு ஒட்டிப் பிறந்தது விளையாட்டு என்பது தெரியார்
ஆரோக்கியமான உடலுக்கு விளையாட்டு அவசியம் புரிந்து கொள்ள மறுப்பார்.

அன்று கிரேக்கர் கண்ட ஒலிம்பிக் இன்றும் பார்போற்றும் உச்சம்.
பண்டைய தமிழரின் வீர விளையாட்டுக்கள் இன்றும் வியக்கும் சொச்சம்
உடல் மேம்பாட்டை உயர்த்தும் விளையாட்டு உடற்கூற்று ,விஞ்ஞான விளக்கம்
விளையாட்டு மானிட வாழ்வின் முக்கிய அங்கம் இன்று ஏற்றுக் கொண்டது உலகம்.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.