சந்தம் சிந்தும் கவிதை

Jeyam

முதுமையின் நிகழ்ச்சிகள்

முதுமை வந்து மண்வாழ்வை மொய்த்திடுமே

புதுமையென்று மெய்த்த இளமை பொய்த்திடுமே 

தோலும் சுருங்கி தோற்றம் உருக்குலைந்திடுமே 

மேலும் தளர்ந்து முதுகுவளைத்து உலவிடுமே 

அடி எடுத்துவைக்கத் தடியும் வேண்டும் 

நொடிகள்பல போனபின்பே ஒருமுழந் தாண்டும் 

கொஞ்சத்தூரம் நடந்தாலே மூச்சு வாங்கும் 

மிஞ்சிவிடும் கனத்தால் கால்முட்டிகளும் வீங்கும்

வருத்தங்கள் வந்து தொல்லைகள் கொடுக்கும் 

உறுத்தும் நினைவுகள் உறக்கத்தைக் கெடுக்கும் 

மலமும் சலமும் சொற்கேளாது தானாகப்போகும் 

பலமும் குறைந்த வயோதிபம் நகைப்பிற்கிடமாயாகும் 

அடக்கிவிடவே ஆட்டத்தை மூப்பும் வந்துசேரும் 

முடக்கியே தனிமைப்படுத்தும் 

பார்க்கமாட்டார் யாரும் 

உறவாட உறவுகளைத்தேடி உருகியுயிர் துடிக்கும் 

இறக்குமுன்பே முதுமை துயரங்களைப் படிக்கும் 

ஜெயம்

05-02-2022