*புன்னகை பூக்கட்டும்
கோசல்யா வியாழன் கவி 3 /ம் பாகம்
புன்னகை பூப்பதில்லையே
மென் நகையாய் மெல்லென மலர்வது
கன்மனதை கரைத்து கனிவெழுதும்
துன்பியல் துரத்தும் இன்னமுது இளைக்குமது!
அகவை முழுதுமாய் விரிய சம்மதமே
ஆனால் அது உனக்கு ஆகாதே ..ஆறாத
ஆற்றுப்படாத் தொடராய் துயர்சேர
அள்ளுண்டு செல்கின்றாய் அந்நியமாய்!
உனைப் பார்த்து பல திங்கள் .நேர்
நோக்க இயலவில்லை “பார் “வைரஸ்
நுட்பத்தை தடையாக துணி போட்டு
பூப்பதில் ஒளிந்து மழிந்தாய் ஒரமாய்
கண்ணில்தான் கண்டுகொள்வோம்!
நடப்பு ஆண்டில் செந்தழிப்பு முகம்
சிந்துகையில் எடுத்து வர என்னவுண்டு
ஏதிலியாய் தலைக்குள் குழம்பி..உனை
கொண்டாட புன்னகை பூக்குமா?
புறந்தள்ளி போவியா !
கோசல்யாகவி 3 ம் பாகம் 466