*விடுவி *
ஜென்மாந்திரம்
போனபிறவி
முன் ஜென்மம்
இன்னும் ஏதும்
இதற்கு பதம்
இருக்குமோ !
முன் பார்க்காத
பேசாத.ஏன்
பழக்கமற்ற
உறவுகள்
அதி தீவிர பற்றுதலாகி
நம் குறை குறைபாட்டை இல்லாமையை
இனி இருக்காது
என்றறிந்தும்
எதுவுமே வேண்டாமென
நீயே போதுமென
இறுகப் பந்தமாகி
இன்னுயிராய்
சொந்தமாகி
நீணிலத்தில்
நீடியாது
மறைந்து போகினர்!
மற்றவர்க்கு
முன்னெடுப்பாய்
அவர்கள் சுமந்த வலி வதை இரட்டிப்பாக
தொடர விட்டு
மறையும் மாயம்
புரியாத புதிராக
பிறவி விடுவி..
பெருங்கடல்..!
கோசல்யா 449