13.01.2022
கவிஆக்கம் 187
விரயம்
பணம் சம்பாதிக்கப் பாடுபடுவர்
உழைத்த பணம் விரயமாக
ஆசைப் பொருள் வாங்கிக் குவிப்பர்
வாங்கியது காப்பாற்ற முடியா முழுசுவர்
தேவை எனப் பொருள் தேடுவர்
தேவையற்றதென வீசி விடுவர்
வரவுக்காக வாசல் சிறிதாக இருக்க
செலவுக்காக மிகச் சிறிதாக வாசல்
இருக்கணும் என்பது மறந்தே விடுவார்
பொருள் இன்பந் தருகிறது என்பர்
அதே பொருள் துன்பந்தருகிறதென்று
எடுத்துரைப்பர்
மாற்றம் காணும் ஆண்டில்
மாற்றம் செய்ய நினைத்திட
இல்லாதோர்க்குக் கொடுத்து
மன நிறைவில் மாற்றம்
கண்டிடுவோம்