தினம் ஒரு பாமுக கவி-05.01.2022 புதன்
கவி இலக்கம்-1436
கவிதை எழுதுவோம்
————————————-
கவிதை எழுதுவோம் கவிதை எழுதுவோம்
வெள்ளை கடதாசியில் பேனை கொண்டு எழுதுவோம்
முதல் நாலு வரி எழுதுவோம்
திரும்பி திரும்பி படித்து திருத்தி எழுதுவோம்
எட்டுவரி பதினாறு வரியாகி கருக்கொண்ட
கவிதையாக எழுதி முடிப்போம்
இயற்கையில் கண்டவைகளை
பார்த்து ரசித்து கற்பனை உலகில் மிதந்து
உள்ளத்து உணர்வுகளை
உரிமை வேட்கைதனை
சில பொய் புழுகலை
கள்ளமற்ற உள்ளத்தால்
கணக்கெடுத்து அதை
இவ்வுலக வாழ்க்கையில்
நடந்தவை கடந்தவை
அள்ளிக் கொட்டி அலங்காரமாய்
எழுதி பாருங்களேன் ஆரோக்கியமான
கவிதையாய் உருப்பெறுமே