தினம் ஒரு பாமுக கவி-04.01.2022 செவ்வாய்
கவி இலக்கம்-1435
சாதனைப் பெண்களாக
———————————
சோதனைகளை தாங்கி
சாதனைகளை தரணிக்கு
கொடுத்தவர்கள் குடும்ப பெண்களே
உலகப் பந்தை உருட்டிப் பார்த்தால்
வீரத்திற்கு துர்க்கை போல் கல்பனா சல்வானாக
இரும்பு பெண்மணியாக விவேகத்தில்
மார்கிரேட் தட்சர் அம்மையாராக
உலக முதல் பெண்மணி பிரதமராக
சிறிமாவோ பண்டாரநராயக்காவாக
ஆளுமையில் நீண்ட கால பதவியில்
இந்திராகாந்தி அம்மணியாக
கருணையில் மனிதநேயம்கொண்ட
சமாதானப் பரிசு பெற்ற அன்னை திரேசாவாக
துணிந்த உலகமே வரவேற்றி புகழ்ந்த
கான்சலரான அங்கலா மெர்கலாக
அமெரிக்க உப ஐனாதிபதி கமலா கரிஐ்
இவர்களின் திறமைகள் போற்றுதற்கு உரியனவையே
இவர்களின் வழியில் சாதனைப் பெண்களாக முயற்சிப்போம்