உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நன்றி 106

நன்றி 106

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 07-04-2026 சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன் இல்லை என்று இரந்தே நிற்கின்றேன் எல்லை அற்று உதவுவோர்க்கு இதோ முல்லை மலராய் எந்தன் நன்றி தளர்ந்த போதென்னை தாங்கிய கரமே அளர்ந்த அன்பால் ஆதரவு தந்தே உள்ளம் நெகிழ்ந்த உயிராய் மதித்தே வெள்ளம் போல வரிகள் நன்றியே போற்றி வளர்த்த பெற்றோருக்கு நன்றி வெற்றி சூடிய வள்ளலுக்கு நன்றியே சுற்றி சூழ்ந்த உறவுகளுக்கு நன்றி பற்றுக் காட்டிய நண்பர்களே நன்றி என்முகம் தழைக்க உதவும் வானோலி பாமுகம் எனும் முதல் ஒலியே தமிழை வளர்க்க தரமான உணர்வு நிழலாய் தந்து நிமிர்த்தயவர்க்கு நன்றி