உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உறைபனி 97

உறைபனி 97

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 13-01-2026 பூகோள வெப்ப வலயம் எங்கென பறவைகள் தேடிப் பறக்க அங்கென பூச்சிகளும் புதர்களும் புகலிடம் புரியாத புதுமையாய் மறைய பசுமை போர்த்திய காடுகளெல்லாம் பனித்திரை போர்த்திப் படுத்திருக்க உயிர்ப்பின் ஓசை அடங்கிப்போய் உறைபனி ஆளுமை செய்கிறது பச்சை இலைகள் மறைந்து போக இச்சை இன்றி உலகம் உறங்க காலத்தின் ஓட்டம் உறைந்து இங்கு கவிதை பாடுது உறைபனி என்று! ஒரு இராத்தல் பாண் வாங்க பல இராத்தல் உடை போட்டு உறங்க முடியாமல் கால் வலியும் உயிரை வாங்குதே உறைபனியும் உறைபனி உருகினால் நீராகும் உள்ளப்பகை உருகினால் உறவாகும்! உறைந்த மனங்கள் உருகிவிட்டால் உலகம் முழுதும் வசந்தமாகும்!