உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொங்குவாய் 96

பொங்குவாய் 96

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 06-01-2025 அன்பு நிறைந்து அறத்தால் பகிர்ந்து இன்பம் மலர இதயத்தால் பொங்குவாய் துன்பம் களைந்து துணிவே பிறந்து வெற்றி நெருங்கப் பொங்குவாய்! அறிவைத் தேடும் ஆர்வத்தோடு அகிலம் போற்ற பொங்குவாய் நெறிகள் தவறி நடப்போர் கண்டு நெருப்பாய் நீயும் பொங்குவாய் உழைப்பின் வியர்வை உடலில் நிறைய ஊதியம் சிறக்க பொங்குவாய் உணர்வு புரியா மாந்தரிடையே உரிமை கேட்டு பொங்குவாய் மூதாதையரின் இயற்கை மருத்துவம் முடங்கியதால் பொங்குவாய் முதியவர்கள் எல்லாம் முதியவர் காப்பகத்தில் அடங்கியதால் பொங்குவாய்.