உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொங்குவாய்

பொங்குவாய்

அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய் நீதியின் பக்கம் தங்குவாய் மெய்யுரைக்காது பல வாய் பொய்யை பேசுவார்கள் பலவாய் உண்மையின் மகனாக எழுவாய் தன்னலம் அகற்றி தெளிவாய் கடவுளை நம்பியே தொழுவாய் நடப்பவை நடந்திடும் வலுவாய் உலக நடப்பினை அறிவாய் பழுதான மனிதரை புரிவாய் நடிப்பவர் வேடத்தை உரிவாய் விடிவொன்று வரட்டுமே முடிவாய் தொடங்கியே போராட்டத்தை தொடர்வாய் அடங்கிடும் அநியாயம் அதுவாய் மாற்றங்கள் நிகழ்ந்திடும் மெதுவாய் சேற்றுக்குள்ளும் செந்தாமரையாய் தெரிவாய் ஜெயம் 19-12-2025