உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நல்லுறவு

நல்லுறவு

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும் கோளும் ,வாளுமே தில்லுமுல்லாய் வல்லூறாகிட தொல்லை ஆக்கும் வெட்டுறவு வல்லவனுக்குப் புல்லே ஆயுதம் இல்லாதவனில் சொல் காகிதம் பொல்லாதவன் நம்பிக்கையும் நில்லாதவனில் பெருமூச்சுமே கல்லாதவனிலூறும் கண்ணூறு ஆறிடவே ஒன்றிணையும் அன்பு, கூறிடவே அணைக்கும் ஒற்றுமை, தேறிடவே அமைதி, பரிவிரக்கம் , ஏறிடவே பெருமையோ சேர்த்திட நல்லோரில் நாலு பேர் போற்றிடும் நல்லுறவு ஆகுமே .