உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பணி

பணி

ஜெயம் உழைப்பை வாழ்விற்கான கடமை ஆக்கி களைக்காது நாட்களுள் முயற்சியை தேக்கி பிழைப்பின் காலமிது வாழ்க்கையின் ஊக்கி நுழைந்து ஆடிவிடு வெற்றியை நோக்கி பிணி வரும் வந்தது போகும் பணிசெய்து கிடப்பதே கடமையும் ஆகும் பனியென்ன வெய்யிலென்ன அடங்குமோ தாகம் தணியாது தனித்தாலும் பயணத்தின் வேகம் நிறைவேறிப்போகுமே காணும் வண்ண கனவுகள் நரைதிரை கண்டாலும் இளமையாய் நினைவுகள் சிரமேல் தூக்கி கொண்டாடும் உறவுகள் கரைதாண்டும் நிம்மதி மகிழ்ச்சியின் வரவுகள் உண்பது உழைக்காது உலகுக்கு கேடு என்பதை அறிந்து உடலை அசைத்திடப்பாரு எண்ணங்களில் உயர்வின் தன்மையை சூடு மண்ணுலகில் நல்ல மாற்றத்தை தேடு