உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

போர்க்கோலம்-78

போர்க்கோலம்-78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல் கூவும் காலையும் சீராக வீசும் சில்லென்ற காற்றும் பச்சைப் பசேலென நெல்வயலும் பசுதரு சுடு பாலும் பரந்து நிறைந்த மனமும் பண்ணிசையோடு ஆலயமணியும் பட்டாம்பூச்சியான வாழ்வு பறித்தெறிந்தது போர்க்காலம் சாம்பல் தெருக்களாய். சகதி வாழ்க்கையாய் உயிர்க்கொலையும் உடமையிழந்து உலகெங்கும் சிதறல்களாய் சிக்கி முக்கி சின்னாபின்னமாகி சுதந்திரமில்லா சுதந்திரதினமும் மழலைக்காய் எதிர்காலம் மலரட்டும் மௌனமாகி போர்க்காலம் மறையட்டும்.