உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

விழிபேசும் மொழிகள் கண்ணோடு கண்பேச கார்முகிலும் தானோடி விண்ணதிரக் கொட்டியுமே வேகமாயும்-மண்ணினிலே பெண்ணவளும் மெய்சிலிர்க்க பேசுகிறாள் விழிகளினால் பண்ணிசையும் பாய்ந்தோட பாவையவள்-கண்பாடும் காதலினால் கண்பேசும் காரிகையாள் தானசைய பாதவிரல் கோலமிட பேதையவள்-மோதலினால் என்மனமும் பேதலிக் ஏங்குகிறேன் உன்நினைவால் முன்னின்று கன்னியவள் மூச்செறிந்து-அன்பினாலே இன்பயூற்றில் ஏங்குகிறாள் ஏற்றமுடன் கண்களினால் சொன்னபதல் சொர்க்கமடி சுந்தரியே-என்னவளே வேல்விழியால் வேகமுடன் வந்தபதில் சொர்க்கமடி பால்வடியும் உன்வதனம் பார்வையால் -கால்பார்க்க பொங்கிவரும் நீரூற்றாய் பேனேனடி பெண்ணரசி அங்கதனில் கண்விழித்தேன் அஞ்சுகமே-நெஞ்சமதில் காதலினால் வாழ்வினிலே களித்திடலாம் என்னாளும மோதலிலும் காதல்வரும் முனைப்பு கமலா ஜெயபாலன்