உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 297 25/03/2025 செவ்வாய் “நம்பிக்கை” —————— இறைவன் அளித்ததோ இரு கை இங்கு வேணும் இன்னொரு கை இதயம் தந்திடும் இந்தக் கை இகத்தில் இதன் பேர் நம்பிக்கை! பொதிகள் சுமக்கும் இரு இறக்கை போய் இறங்கும் என்ற நம்பிக்கை! பொறிக்குள் சிக்கிய நம் வாழ்க்கை பொறி இயந்திரம் மீதே நம்பிக்கை! தண்டவாளம் மீதோடும் தொடரூந்து தடம்புரளாது என்று ஒரு நம்பிக்கை! சண்ட மாருத வேகத்தில் ஓடிடவே சமநிலை தழும்பிடும், தவறும் நம்கை! அயலவர் அறிந்தவர் தரும் கை, அகத்துள் உள்ளதா என நினை! ஆண்டவன் தந்திடும் அரும் கை, அன்பினால் தந்ததே என நினை! துதிக்கையான் பாதத்தில் வை கை துவளாதுனை காத்திடும் அவன் கை நினைக்கையில் வந்திடும் ஒரு கை நித்தமும் கிடைத்திடும் நம்பிக்கை! நன்றி “மதிமகன்”