உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-57 07. 01 - 2024 பூக்கும் புத்தாண்டு பூக்கும் புத்தாண்டே புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் கற்பனை சிறக்க காவியம் படைக்க காலடி வைக்க கனவுகள் யொலிக்க சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க பூமியாக்கி பெற்றவரை மதித்து பேராண்பை பூண்டு பெண்ணடிமை தகர்த்து பிறப்பில் பேதமற்று மரங்களை நாட்டி மற்றான் நலம்பேணி மதவெறி அகற்றி மனிதநேயம் காத்து சுற்றாடல் பாதுகாத்து சுகாதாரம் வளர்த்து சுகமாக சுவாசித்து சுறுசுறுப்பாய் வளர புத்தாண்டே நீ புலர்ந்து வா புன்னகை மலராய் பூக்கும் புத்தாண்டே. நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.