உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-55 10-12-2024 ஈரம் நினைக்கின்ற நேரம் நெஞ்சினிலே பாரம் கண்ணருகே ஈரம் கவிதைதனை வரைய போட்ட சுரத்தில் பாடலின் ராகத்தில் கவலைகளும் தூரமாய் கனவுகளும் ஓரமாய் வாழ்க்கையே நரகமாய் வாழ்ந்த வாரமெல்லாம் தொலைந்தது தூரமாய் தோழியவள் மாவீரரென! காந்தள் மலரெடுத்து கூப்பிய கரத்திலிட கூச்சலிடுது அந்தநேர ஞாபகமாய் பேரளிவு! பேதை நினைவிலொரு கடந்த கால சீரழிவு காலநேரம் நெருங்கிவர . கனவுகளும் ஒளிருமிங்கே. மனங்களில் ஈரம்கசிய பலரின் பாரமகற்றி பாரியின் தேரைப்போல எம் ஊராருடன் வாழ்வோமே. நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.