உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-284. தலைப்பு! சலவை .......... மூளைச் சலவை செய்வார் நாட்டில் - அரசியல் மோசடி ஆட்கள் எல்லாம் ஓர்படை வீட்டில்! எத்தனை காலம் ஏமாற்றுவார் மக்களை - அட அரசியல் வாதிகள் சொல்வார் பொய்களை! கோவேறு கழுதைகள் என்றும் குத்திரைகள் ஆகுமா? - ஒரு கூத்தாடிக் கூட்டத்தால் இந்த நாடே விடியமா? கூட்டத்தை வைத்தே நாட்டில் எடைபோ டாதே - ஒரு கொள்கை அற்ற கூட்டம் நிலை கொள்ளாதே! மாவீரர் கனவை நீ நனவாக்க மறந்தாயா? - விடுதலை மறவரை எண்ணாமல் உயிர் துறந்தாயா? மாவீரர் கனவையே மறவாது நனவாக ஆக்கு - ஈழம் கட்டாயம் மலர நீ எப்பொழுதும் நோக்கு! ஈழம் மலராது பல்லோர் செய்வார் சலவை - அவர்கள் துண்டாடப் பார்ப்பார் எம்மக்கள் உறவை! கார்த்திகைத் திங்கள் புதிதாய் மலருது பாரடா! - நம் கவலைகள் எல்லாம் தீரும் நல்ல நாளடா! அனுரா அரசியல் அழகாய் நடக்குது பாரடா! - இனி அனைத்திலும் நன்மை பிறக்கும் பாரடா! குழப்படிக் கூட்டம் நடுங்கும் தருணம் இதுவடா - மக்கள் கூட்டம் ஒன்றாய்க் கூடி வாழட்டும் இனியடா! மூளைச் சலவை இங்கே கைக்கூலிகள் தானடா - அந்த முழு மூடர்கள் நம்மை ஏய்த்திடுவார் பாரடா! விழிப்புணர் வோடு நீ இருந்திடப் பழகு! - ஈழ விடுதலை ஒன்று மட்டுமே நமக்கு அழகு! ஆசிரியர்:அபிராமி கவிதாசன். 29.10.2024