உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 284 29/10/2024 செவ்வாய் “ சலவை” ————— அழுக்குப் போக்கிடும் சலவை! அகிலத்தில் வேண்டும் சலவை! இழுக்கு போக்கிடவும் சலவை! இதயம் வெளுத்திடவும் சலவை! துணிக்கு மட்டுமல்ல சலவை! துஷ்டர்க்கும் வேணும் சலவை! பணிகள் மேலோங்கச் சலவை! பாங்காய் மிளிர்ந்திட சலவை! பணம் வெள்ளையாக்க சலவை; படித்தவரும் செய்வாரிச் சலவை! குணத்தை மேலாக்கச் சலவை; கொடுப்பர் ஞானிகளிச் சலவை! மூளைக்கு செய்திடும் சலவை, முனைப்புக் காட்டிடும் சலவை! ஆளுக்காள் செய்யும் சலவை, அதிகார மோகத்தின் சலவை! வெளுத்தது யாவும் வெள்ளையா! விளங்கிட மனமதும் இல்லையா! அழுத்தியும் அடங்கா எல்லையா! அதற்கும் அதிகார தொல்லையா! நன்றி “மதிமகன்”