உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மனோகரி ஜெகதீஸ்வரன்

மனோகரி ஜெகதீஸ்வரன்

ஒவ்வாமை இயலாமை ஒருவருக்குக்கொருவர் ஆகாமை நம்பாமை நயக்காமை நடுநிலைமை இல்லாமை இல்லாமை ஈயாமை இதயமில்லாமை இங்கிதமறியாமை கல்லாமை காசில்லாமை கம்பீரம் காதலில்லாமை குஞ்சு குருமனையும் கூசாது கூடல் பஞ்சனையில் வீழ்த்திப் பத்தினியை மேய்தல் நஞ்சணைய நாகரிக நங்கையர் கொல்லும் அஞ்சனவிழி சுழற்றிக் கேளிக்கை செய்தல் சூதுவாது வம்பளப்பு வரும்படிக் குளறுபடி சாதிநீதிச் சண்டை சங்கார வெம்மை பாதிவழிப் பிரிவு பலபாதக விரிவு நாதியற்ற நிகழ்வென நம்மிடத்தில் பலகறைகள் ஊதித்தள்ள முடியாது உறைந்து போயுள்ளன. கறையகற்ற உகந்தது சலவை கசக்கின் போகும் அனைவரினதும் கவலை தேவை அதற்கு விழிப்புணர்வு ஆதலால் வாரீர் அடைவை நோக்கி நெஞ்சகச் சந்தில் குந்தி வஞ்சகம் விதைக்கும் எண்ணங்கள் பஞ்செனப் பறக்கச் செய்வோம் சலவை. மனோகரி ஜெகதீஸ்வரன்.