உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 283 22/10/2024 செவ்வாய் “ஆசான்” ஆசான் என்பவன் திசைகாட்டி! அவனே வாழ்க்கைப் படகோட்டி! தோஷம் நீக்கும் தொலைகாட்டி! தொல்லை விலக்கும் வழிகாட்டி! கல்விப் பால்தரும் முலையூட்டி! கற்பனை வளமுடன் அறிவூட்டி, சொல்லும் பொருள் மெருகூட்டி, சுவைக்க வைத்திடும் சுகமூட்டி! கல்விக் கொடையினில் கர்ணன்! கலைகள் படைப்பதில் மன்னன்! சொல்லில் அவனே விண்ணன்! சோதனை காலத்தில் வில்லன்! சுமைகள் சுமக்கும் பாரம்தூக்கி! சோகம் மறைக்கும் வேடம்தாங்கி! இமைகள் மூடாமல் இசைவாக்கி! இன்னரும் கடமைப் பிறப்பாக்கி! இலைமறை காயாய் இருப்பவரை இலகில் அடையாளம் கண்டவரை கலைமகள் கடாட்சம் தரும்வரை காத்திடும் ஆசானே முதல்நிரை! நன்றி “மதிமகன்”