உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கெங்கா ஸ்ரான்லி

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு அதிரடி ———— அதிரடியாக்க் காதலித்து பொடிப்பொடியாகப் போனதே சதுரடி கேட்டதன் விளைவோ புதுச் சரவெடி புட்டு வைத்ததே மதிவழி சென்று மகத்துவம் காண விதிவழி வந்த வேளை வேண்டாமென்றதே கனவுகள் காணும் வயதில் கற்பனைகள் மிதந்து நிற்குறதே அதிரடியாக அவையும் நடைமுறை யாகிறதே அதிரடித் தாக்குதலால் அழிந்தவை தான்எவ்வளவு அத்தனையும் இன்று நினைக்கையில் எம்மண் எம்தேசம் வளங்கெட்டு பலம் குறைந்து போனதே அதிரடிகள் தேவையுமில்லை அதனால் ஒரு பயனுமில்லை சொல்லடி இன்றி அகிம்சையால் அன்பால் சாதித்திடு அளவோடு. எல்லாமே ! நன்றியுடண் கெங்கா ஸ்ரான்லி 7.10.24