உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 279 விடியுமா தேசம் உள்ளமெனும் ஓடையிது உணர்வென்னும் நீரோட்டம் உறைந்துவிட்ட உணர்வுகள் உறுத்துமெமைக் காலமெல்லாம் விடியலின் வாசலுண்டு வெளிச்சமங்கு தெரிவதுண்டு உருவமில்லா வெளிச்சமதை உணர்வதொன்றே விடியலன்றோ காற்றடிக்கும் வேளையிலே காய்ந்த இலை பறப்பதுண்டு காலமெங்கு புதைக்கிறதோ கரைந்துபோகும் உரமாக நீருக்கு வடிவமில்லை நிறைக்குமிடம் அறிவதில்லை வேருக்குள் பொழிந்திட்டால் விருட்சமங்கு வளர்வதுண்டு காலத்தின் சுழற்சியிலே காட்சிகள் மலர்வதுண்டு சாட்சிகளாய் பார்த்திட்டால் சலனமில்லா வாழ்க்கையுண்டு ஆன்மாவின் பயணமிது அனுபவங்கள் பரிசாகும் அடுத்தொரு பயணத்துக்கு அடைவதெல்லாம் சேகரிப்பு பாதையொன்றைப் போடுகிறோம் பயணமதில் நிகழ்கிறது இன்பமும் துன்பமும் நமதே இறைவனை ஏன் சாடுகிறோம் ? கடந்து செல்லப் பாதையுண்டு கடவுளைக் காண வழியுமுண்டு எமக்குள்ளே உறைந்திருக்கும் எம்மிறைவன் சிரிக்கின்றான் ஏற்றுக்கொண்டு வாழ்ந்திட்டால் எல்லாமே புரிந்திடலாம் எமக்குள்ளே தியானத்தால் எம்மை நாமே அறிந்திடலாம் சக்தி சக்திதாசன்