உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 276 13/08/2024 செவ்வாய் பருவம் ———— இயற்கையின் பருவம் நான்கு! இளவேனில் என்பதும் ஒன்று! நினைக்க இதுபோல் நன்று, நிலமதில் உண்டோ சொல்லு! கோடை என்ற பருவம்-இதில் கொப்பளம் கண்டிடும் சருமம்! ஆடையும் கேட்கும் விடுமுறை, அதற்கு இல்லையே படிமுறை! இலையுதிர் பருவம் துன்பியல்! இதுவோ இயற்கை உளவியல் அலைமிகு ஆழிசூழ் உலகதில் ஆழமாய் பதியும் வாழ்வியல்! குளிர்மிகு பருவம் இதுவென்று குறிப்பிட வேண்டுமா சொல்லு தளிர்களும் தடைப்படும் முறையின்றி தரணியும் உறங்கிடும் தடையின்றி! வேறு பருவத்தே பயிர்செய் என்று, படித்தவர் சொன்னார் அன்று! புருவத்தை உயர்த்தா தின்று! புரிந்து நீ நடப்பது நன்று! நன்றி மதிமகன்