உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இராசையா கௌரிபாலா

இராசையா கௌரிபாலா

ஒற்றுமை ஒற்றைக் காகிதத்தின் ஒற்றை வரியில் பெற்றுவிட முடியுமா பொறுமையின் உருவமே விற்பனைப் பொருளல்ல வேண்டுமென நினைக்க தற்பெருமை அழித்திட ஒற்றுமை கூடுமே கற்பனையில் மிதக்கும் கலகத்தை விலக்கி சிற்பமாய் வடிவமைக்க சிந்தையின் உதயமே அற்பன் பவிசில் ஆர்ப்பரிக்கும் கடலே நற்பலன்பல கிடைக்கும் நானிலத்தின் ஒற்றுமையே சுற்றம் தேவை சுவையும் அதுவே கற்றவர் கைபிடித்து கல்லாமை நீக்கிட மற்றவரும் நல்வளம்பெற மானுடம் போற்றுமே குற்றம்காணாக் குவலயம் கேட்போம் ஒற்றுமையாய். இராசையா கௌரிபாலா