உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.07.2024 கவிதை வாரம்-274 “விடுமுறை” வருடந்தோறும் வந்து போகுதே வளமான விடுமுறை கோடை காலமே ஆனி ஆடி மாத விடுமுறை எனக்கு கிடைத்ததே தாயக பக்கம் இலக்கு நோக்கிய பயணமே இரு பொன்மாலைப் பொழுதுகள் இடம் பெற்றதே கொக்குவில் அல்லைப்பிட்டி காத்தான் குடி கிளிநொச்சி நகரங்கள் சுற்றுலாவானதே கடற்கரை நீச்சலும் மணற்தரை விருந்தோம்பலும் மனதில் மகிழ்வானதே பிற உறவுகள் சந்திப்பும் அன்பும் அரவணைப்பும் மேலானதே இளநீர் நுங்கு பருகலும் முக்கனிகள் முழுமையாக வயிறார உண்டதும் உடல் வெப்பம் தணிய வைத்ததே சத்தான பச்சை மரக்கறியும் துடிக்க துடிக்க கடல் உணவுகளும் ஆசை தீர உண்டு பசி தீர்த்தோமே உறவுகள் சந்திப்பும் உல்லாச பயணமும் விடுமுறை களிப்பும் சிறப்பானதே ஜெயா நடேசன் ஜேர்மனி