உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

பெண்ணே —————————- களை யெடுக்கும் கன்னிப் பெண்ணே/ கண்ணே உன்னக் கண்ட தனால்/ வயல்காட்டு வரம்பினிலே வந்துநானும் சுத்துறேன்டி/ பயலைப் பிடிச்சிருக்கா பயப்படாமல் சொல்லேண்டி/ கண்ணழகு மூக்கழகு கண்மணியே உன்னழகு/ கண்மூட முடியாமல் கலக்கி அடிக்குதடி/ பொன்னான உன்பாதம் மண்ணான சேற்றிலே/ மடங்கிப் போகாமல் மாமன் தாங்குவேண்டி/ கன்னக் குழியழகும் கருங்கூந்தல் பேரழகும்/ அன்ன நடையழகும் அசத்துதடி என்மனசை/ பண்ணாலே பாட்டிசைத்து பம்பரமாய் நாற்றுநட/ காதல் பெருகுதடி காளைமனம் ஏங்குதடி/ வண்ணக் கிளியழகே வடிவான பெண்ணழகே/ வளையலும் சினுங்குதே வருவாயோ எனதருகே/ தருவாயா உன்மனசை தாங்குவேண்டி காலமெல்லாம்/ முருகன் முறைப்படியே அருகில்வந்து அமரேண்டி/ கமலா ஜெயபாலன்