உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர்

ராணி சம்பந்தர்

04.06.24 ஆக்கம் 149 பெண்ணே பள்ளிக் கலை விழாவில் பெண்ணே நீ துள்ளி ஆடிய நடனம் கண் முன்னே வெள்ளித் தட்டில் பூக்கள் தூவி அலை அலையான பள்ளி மாணவர் கை தட்டிய ஆரவாரம் என் காதில் இன்னும் ஒலிக்குதே புள்ளி போட்ட ரவிக்கை செவ்வர்ணச் சேலை கட்டி வண்ணச் சோலை இல் சக தோழியருடன் சுற்றிய உன் சிங்காரப் பார்வை எனைக் கண்டு சேதி என்னவோ சொல்லியதே பெண்ணே பொன்னு மணியே கன்னக் குழி அழகும், மென் புன்னகை பூத்த முத்துப் பல் முக அழகும் சிட்டாய்ப் பறக்க மனம் பேதலிக்குதே கண்ணே உன் கழுத்தில் மாலையிட்டு மணக் கோலம் காணத் துடிக்கும் என் உயிரில் கலந்திட உளம் திறந்து மனம் நிறைவான பதில் தருவாயா பெண்ணே . ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து