உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-266. தலைப்பு! "நிர்மூலம்" ...... முள்ளிவாய்க் காலில் எம்மக்களும், மாவீரர்களும் சிங்கள இனவெறிக் காடையரின் பயங்கரவாத அரசால் நிர்மூலம் ஆக்கப்பட்டதை எப்படி எங்களால் மறக்க முடியும்? நிர்மூலமாக்கப்பட்ட எம் தேசத்தை மீட்கவே உணர்வூட்டுவோம் நினைந்து நினைந்து விடுதலை வேட்கை வெறியேற்றுவோம்! எமது தாகம் தமிழீழத் தாயகம் - என்பதை என்றும் மறப்போமா? வென்று முடிக்காமல் வெற்றி படைக்காமல் நாங்கள் வீணாய் இறப்போமா? போதையற்ற தேசம் படைத்தோம் - அதை நிர்மூலமாக்கிய சிங்களம் கண்டோம் பாலியல் குற்றம் பரவக் கண்டோம் - அதைத் தடுக்க முடியா அரசுகள் கண்டோம்! நள்ளிரவிலும் வஞ்சியர் நடப்பார் நான்கு திசையிலும் காவல் இருப்பார் - அதில் நேற்றுக் கிளியாய் இருந்த தங்கைகள் - இன்று விடுதலைப் புலியாய் இருப்பார் - பகைவன் தொட்டால் நெருப்பாய் எரிப்பார்! தற்சார்பு நிலையில் இருந்த தாயகம் - அதில் தன்னிகரற்ற - தேசியத் தலைவரே நாயகம்! கொடிய சிங்களர் வாழும் கொழும்பு - அதில் நாங்கள் அடித்ததே மாறாத் தழும்பு! எம்மை நிர்மூலம் ஆக்கிய எதிரியை நினைப்போம் - நாம் நினைத்ததை முடிக்க சீமான் சின்னமாய் இருப்போம்! . இன்று அழியும் விளிம்பில் தமிழினம் பாரீர் - அதைத் தடுத்து நிறுத்த ஒற்றுமை தாரீர்! நம்மை நிர்மூலமாக்கிய சக்தியைப் பிளப்போம் நமக்குப் போட்டத் தடையை உடைப்போம்! புலம்பெயர்ந்தவர் புயலாய் எழுவோம் - அறிவுப் புரட்சியால் ஈழம் படைக்கத் திரள்வோம் நம்மை நிர்மூலமாக்கியப் படு கொலையரைப் பிடிப்போம் - அவரை நிர்மூலமாக்கும் செயலில் துடிப்போம்! அடிக்கு அடியைக் கொடுக்க மறப்போமா? பல ஆண்டுகள் ஆயினும் சும்மா இருப்போமா? அபிராமி கவிதாசன். 21.05.2024