உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-36 14-05-2024 குருதிப்புனல் எம் கனவுதேசம் கையை விட்டு கடந்து போன காலம் கொஞ்சம் நினைக்க நெஞ்சம் பதறுதே.. இழந்த உரிமைக்காக விடுதலைக்காக சுயமரியாதைக்காக குரல் கொடுக்க ஒடுக்க இனப்படுகொலைகள் கடல் சூழ் முள்ளிவாய்க்கால் தொடரல் நிலத்தில் கடல் போலச் சனங்கள் குருதிப்புனலாக நகர்ந்த நாளிது இளையவர், முதியவருமாய் குஞ்சுகளும், பிஞ்சுகளுமாய் தஞ்சம் புகுந்த இடத்திலே நெஞ்சங்கள் பிளந்து அழிந்தது எம் இனம் மரண ஓலங்கள் ஒலித்தது. அழுகுரல்கள் காதை பிளந்தன நந்திக்கடல், குருதிப் புனலாய் அலை பாய அந்நியதேசம் அமைதியும் காத்த மே 18. நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.