உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 263 30/04/2024 செவ்வாய் “அழகு” ———— காலை இளம் கதிரோனும், கனிவு தருமிள வேனிலும், மாலை ஒளிதரு மதியவளும், மண்ணின் மாண்பு கூறிடுமே! காவும், கவினுறு சோலையும், கடலது தருமலை யோசையும், மேவிடு நதிகளும், மலைகளும், மேதினிக் கழகு சேர்த்திடுமே! பூமகள், நனிதரு ரோஜாவும், பூங்குழல் விரும்பிடும் மல்லியும், நாமகள் நயந்திடும் தாமரையும், நானிலம் கொண்ட நல்லழகே! கொஞ்சு மொழி குயிலதுவும், கோவை இதழ் அஞ்சுகமும், மஞ்ஞை என்னும் மயிலதுவும், மண்ணின் மகத்துவ எழிலாமே! துள்ளும் புள்ளி மானினமும், தொங்கிப் பாயும் முயலினமும், கொள்ளை அழகு சேர்த்திடுமே! குவலயம் அழகு கொண்டிடுமே! நன்றி “மதிமகன்”