உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன் (2)

சக்தி சக்திதாசன் (2)

பணம் பணம் கொண்டோரெல்லாம் மனம் கொண்டிருப்பதில்லை மனமுடையோர் எல்லோரும் பணம் கொண்டிருப்பதில்லை ஐனநாயகம் பேசுகின்றோர் பணாநாயகம் தேடுவதும் ஐயபேரிகை முழக்கம் ஐகத்திலே பணவசமே ! உழைப்பவர் உலகத்தில் உறவாடாத பணவசதி உறிஞ்சுகின்ற கூட்டத்திடம் உல்லாசப் பணப்புழக்கம் பணமில்லாக் காரணத்தால் மணமில்லா மங்கையர்கள் பணமிருந்தும் பலரிங்கு மனந்திறக்கா வாழ்க்கையிலே பணமென்னும் காகிதம் பாரினது ஜாதகம் பணமென்னும் சொல்லிங்கு பல்லரசாய் ஆட்டுதடா செல்வந்தர் கைகளிலே செல்லமாக விளையாடும் வறியோரின் வாழ்க்கையையே வாட்டத்தில் ஓட்டிவிடும் நல்லோர்கள் கைகளிலே நடமாடும் பணமெல்லாம் இல்லாதோர் வாழ்க்கையினை இன்பமாய் ஆக்குமன்றோ ! சக்தி சக்திதாசன்