உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்:259 02/04/2024 செவ்வாய் ஊக்கம் ———— ஊக்கம் உயர்வு தரும்- ஆதலால் ஊக்கம் உயிரென நோக்கு! காக்கும் கடவுளும் காப்பாற்றார்-உன் ஊக்கம் தவறின் எப்போதும்! இன்று, நாளையென நீள-ஊக்கம் நின்றே போய்விடும் நினை! குன்றை, மலையாய் எண்ணா ஊக்கம், நன்றே நகர்ந்திடும் அறி! ஊக்கமிலா நோக்கம்-பெரிதெனினும், தேக்க நிலைக்கே இட்டுச் செல்லும்! ஆக்கம் தந்திடுமே வாழ்வில்-ஊக்கம் நோக்கத்தையும் நிறைவு செய்யும்! செல்லும் பாதை நீண்டிடினும்-ஊக்கம் வெல்லும், உன்வாழ்வும் சிறக்கும்! அல்லும் பகலும் உழைத்தாலும்-ஊக்கம் இல்லா நோக்கம் பிசுபிசுக்கும்! உலகில் இலக்கு உண்டேனும்- ஊக்கம் விலகில் பிழைத்திடும் இலக்கு! இலகில் காத்திருந்த கிளியாகி-ஊக்கம் விலகில், விளைந்திடும் விபரீதம்! நன்றி மதிமகன்