உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

05.03.24 ஆக்கம் -136 பகலவன் அதிகாலையில் முகஞ் சிவக்க அடிவானம் குதித்திடுவான் ஆயிரமாயிரம் வேகமோடு பாரினில் பதித்திடுவான் காலமெல்லாம் இனிது வாழக் காத்திருந்து கனி தருபவன் காணுமிடமெலாம் மேனி தழுவி சேர்த்திருந்து ஒளி ஊடுருபவன் பசித்தவர்க்கு வயிறு நிறைய வாரி வழங்குபவன் பச்சைப் பசேலில் உரமூட்டுபவன் அசுத்த நீரில் விளையாடி சுத்தம் தந்து தாகம் தீர்ப்பவன் மின்சாரமதில் முத்திரை பதிப்பவன் சருமமதில் புத்துயிர் சாதிப்பவன் உருவ நோய்க்கு மருந்தாகுபவன் மனிதனுக்கு வித்திட்ட புனிதன் வணங்கிடும் பகலவன் .