உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

மார்கழி நீராடி மகிழ்ந்திருக்கும் திங்களிது/ கார்மேகம் சூழ்ந்திருந்து கறுத்திருக்கும் திங்களிது/ பார்காக்கும் பரமசிவனும் பிட்டுக்கு மண்சுமந்து/ பார்பதியை பாதியாக்கிய பரமனைத் தானெழுப்பி/ ஊர்எங்கும் திருவெண்பா பாடுகிற மாதமிது// அதிகாலை நீராடி ஆயர்குலப் பெண்கள்/ கதியே நந்தகோபனென காத்திருக்கும் மாதமிது/ மதிநிறைந்த நன்நாளில் மையிட்டு எழுதாமல்/ விதியே கண்ணனென வீற்றிருக்கும் திங்களிது/ குதித்தெழுந்து பெண்கள் கொண்டாடும் காலமிது// நெற்கதிர்கள் தலைசாய்ந்து நிற்கன்ற மாதமிது/ பற்கள் படபடத்து சொற்கள் தடுமாறும்/ பெய்கின்ற மழையில் தண்ணிர் சலசலக்கும்/ தவளை சத்தமிடும் பாம்பும் உலாவரும்/ பத்திரமாய் வீட்டினுள்ளே படுத்திருக்க ஆசைவரும்/ கமலா ஜெயபாலன் விருப்புத் தலைப்பு