உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

“பறக்கும் வேளை” மிதக்கின்ற விமானத்தினுள் பிறக்கின்ற கவிதையொன்று கருக்கொண்ட மேகங்களாய் கரைகின்ற சொற்துளிகள் தவழ்கின்ற மேகங்களை தழுவுகின்ற நினைவுகள் தமிழாக இசைக்கின்ற தனியான இராகமிது எந்தையும் தாயுமிங்கு என்னோடு பறப்பாரொ ? எண்ணத்தின் மூலமாய் ஏதேதோ சொல்வாரொ ? காற்றோடு காற்றாக காததூரப் பயணமிது நேற்றோடு கலந்திட்ட நினைவுகளோ சுமையாக விழிமூடும் வேளையிலும் விழிதிறக்கும் பொழுதிலும் உள்ளமெல்லாம் தமிழ்தானே ! உயிர்த்துடிப்பும் அதுதானே ! இங்கிலாந்து நினைவுகளை இந்தியாவில் தரையிறக்கும் இணைக்கின்ற பாலமாக இருப்பதெல்லாம் தமிழ்தானே ! கவிஞனாக எண்ணவில்லை கவிதையென்று கொள்ளவில்லை மனிதனிவன் நீலவானில் மிதக்கின்ற புலம்பலிது விஞ்ஞான விந்தையதில் விளைந்ததிந்த விமானத்தில் அஞ்ஞான மனிதனிவன் மெய்ஞானம் காண்பதெப்போ ? விடிகின்ற பொழுதிலெல்லாம் வடிக்கின்ற கவிதைகளாய் முடிக்கின்ற வாழ்க்கையதில் முடியாத கேள்விகளாய் . . . . . சக்தி சக்திதாசன்