சக்தி சத்திதாசன்
சக்தி சத்திதாசன்
காதல்
நெஞ்சுக்குள்ளே எரியும்
சுவாலை எந்த நீரினாலும்
அடங்காத தாகம்
எனக்குள்ளே ... எனக்குள்ளே ....
பிறக்கின்ற வேகம் ;
ஏதோ சிறகெடுத்து
பறக்கின்ற ஞானம்.....
பிறந்ததன் பயனறியா
இறந்தபின் முடிவறியா
ஈரம் !ஈரம் !ஈரம் !
நெஞ்சை அழுத்தி நிற்கும்
பாரம் !
மோகச் சுழலுக்குள்
மீள வழியின்று
சிக்கித் தவித்து நின்ற
முட்டாள் பருவமதில்
அறியாதிருந்த அனுபவங்கள்
ஆயிரமாய்க் கற்றுத் தந்தன...
எதைத் தேடினேன் ----பின்னே
அதையா நாடினேன்?
ஏனோ மூடினேன் நெஞ்சக்
கதவைத் திறக்கச்
சாவி ! சாவி !சாவி !
இல்லையெனத் தாவிச்
சரிந்ததொரு
தென்னஞ்சோலையெனும்
காதல் சாலையதில்
நீளமான பயணத்தில்
நின்று விட்ட ஞாபகங்கள் .......
தொலைத்து விட்ட கணங்களை
எனக்குள் நானே
இன்றும் தேடிக் கொண்டே .....
சக்தி சக்திதாசன்
