உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சிறீனிசங்கர்

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு கலவரம் ********** கருத்துகள் முரண்படும் காரியம் தடைபடும் செருக்குடன் இருப்பர் செய்வனே செய்யார் அருவருக்கும் ஆட்சி ஆளணி நெறிமுறை உருக்குலைய வைக்கும் உலகையே உலுப்பும் கலகம் உண்டாக்கிக் கவிழ்த்துப் போடுவர் அலசல் ஆயிரம் அவைகளில் அரங்கேறும் விலகவும் மாட்டார் வீணிலே வாதமும் சலனமும் நிறைந்து சமுகம் உடைபடும் கவலையும் கொள்ளார் கலவரம் பெருகினும் அவதிகள் பட்டே ஆண்டிகள் ஆகிடும் மக்களைக் காத்திட மகேசனின் அருளே இக்கணம் உறுதி இயம்புவேன் நானே! நன்றி வணக்கம்!