உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.11.23 ஆக்கம் -124 பிறந்த மனை வரலாற்று மனிதன் வாழ்க்கைக் காலமதில் பிறந்த மனை களிப்பு பேராற்றுப் பெற்றோரின் ஆற்றாத கண்ணீர் பூரிப்பு தந்தையின் தனி உழைப்பு இருபத்தைந்து காணிப் பரப்பு வளைந்து சுற்றிய அரணில் நுழைந்து பற்றிய நொடியின் துடிப்பு அன்ன இலட்சுமி இல்லமது அன்பின் இருப்பிடமாய் அரவணைத்த பசி தீர்ப்பிடம் ஆடிப்பாடிய கலகலப்பது மாமரக் கிளை ஊஞ்சல் கட்டி இலை பிடுங்க உண்ணியே காலைத் தொடும் மண்ணிலே சேலைத் தலைப்பில் துடைத்திடும் தாயன்பே பிறந்த மனை .