உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 242 14/11/2023 செவ்வாய் நீரிழிவு ———- அடிக்கடி சிறுநீர் கழியும்! அளவின்றி தாகம் எடுக்கும்! அதியுச்ச பசியும் இருக்கும்! அலுப்பும் உடலில் தெரியும்! உடலின் நிறையும் குறையும்! உள்ளமும் சோர்வு காணும்! உடலில் சொறியும் தோன்றும்! உன்கண் பார்வையும் மங்கும்! நீரிழிவின் அறிகுறி அறிந்து, நினைவில் என்றும் இருத்து! பாரழிக்கும் பயங்கரம் பார்த்து, பக்குவமாய் வாழ்வை நகர்த்து! ஆறிலும் எம்மைத் தாக்கும்! அறுபதிலும் முகம் காட்டும்! சோறும்,மாவும்,கற்கண்டும், சொட்டைத் தீனும் ஒத்தூதும்! பரம்பரை வழியே பெறுவதுண்டு! பக்குவம் தவறினும் வருவதுண்டு! நிரந்தர கவனம் எடுத்துவிடு! நிம்மதி என்றும் உனக்குண்டு! நன்றி மதிமகன்