உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 239 24/10/2023 செவ்வாய் ஆறு மனமே! காலை மாலை யென்று கடிதாய் வேலை செய்து நாலு இரண்டு சேர்க்கும் நாளும் வரும்-ஆறு மனமே! வேலை யென்று சொல்லி வெளி நாட்டிற் கனுப்பி காலை வாரும் கயவர் கருகுவர்-ஆறு மனமே! பித்தம் வாதம் போன்ற பீடை பிணிகள் நீங்கி சித்தம் இனிக்க வாழும் சிறப்பு வரும்-ஆறு மனமே! குழந்தை குட்டி குஞ்சை குண் டெறிந்து சிதைக்கும் பாழும் கொடிய யுத்தம் படியும்-ஆறு மனமே! கூறு போட்டு உலகை குட்டிச் சுவர் ஆக்கும் நாறும் எந்த அரசும் நலியும்- ஆறு மனமே! நன்றி “மதிமகன்”