உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம்—239 அந்திசாயும் நேரம் அந்த பஸ்சின் ஓரம் சாரதிக்கு அருகே பயணம் செய்யும் நேரம் மேலாடை அற்ற மனிதன் போதையில் தள்ளாடும் ஒருவன் டிக்கட் எடுக்க காசு இல்லை பஸ்சை எடு என வினவி நுழைந்து பின்சென்றான் ஓடாது பஸ் ஸ்தம்பிக்க! ஒடி வந்து துப்பினான் சாரதிக்கு இறங்கும் வரை ஓடாது என்று சொல்ல ஓங்கி அடிக்க தீ அனைப்பு போத்தலை எடுத்தான் கட்டிய போத்தல் கைக்கு எட்டவில்லை! இறங்கி கல் எடுத்து அடித்தான் கண்ணாடிக்கு! வன்மம் செய்தவனை வாரி அனைக்க பொலிசை அழை என்றோம் வீதியில் நடப்போருக்கும் விசனங்கள் நடக்கலாம் அச்ச நினைவுகளில் நின்று ஆறுமோ மனது!….., க.குமரன் யேர்மனி