உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 238 “மீண்டெழு” வீழ்ந்து விடாதே ! காலம் சற்றே கடினமாய் காற்று சற்றே வேகமாய் சேற்று நிலங்களே பாதையாய் கண்டிட்டாலும் தளர்ந்து நீயும் வீழ்ந்திடாதே ! தாழ்ந்து விடாதே ! வெட்டி பேசும் வீணர்களும் தட்டி வீழ்த்தும் நீசர்களும் முட்டிப் பார்க்கும் மூர்க்கர்களும் முன்னால் வந்து நின்ற போதிலும் தாழ்ந்திடாதே ! தளர்ந்து விடாதே ! முயற்சி செய்து தோற்றாலும் உழைத்தும் வாழ்வில் உயராமலும் விரைந்தும் ஊர் போய்ச் சேராமலும் பட்டும் அனுபவம் உதவாவிட்டாலும் தளர்ந்திடாதே ! மலைத்து விடாதே ! எண்ணாத நேரம் வென்றிட்டாலும் நினைக்காத ஒருஇவர் உதவிட்டாலும் நம்பாத செயல்கள் நடந்திட்டாலும் நாளை உன் வாழ்வு சிறந்திட்டாலும் மலைத்திடாதே ! திகைத்து விடாதே ! எட்டாத உயரத்தில் மின்னும் கிட்டாத வாழ்வினை எண்ணி தட்டாத கதவுகள் திறந்திடினும் ஈட்டாத வெற்றிகளை எண்ணி திகைக்காதே ! தொலைத்து விடாதே ! கனிவான உள்ளத்தின் ஈரத்தை துணிவான தோள்களின் வீரத்தை பணிவான நெஞ்சத்தின் தன்மையை பட்ட அனுபவங்களின் ஞானத்தை தொலைக்காதே ! சக்தி சக்திதாசன்