உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Sakthy Sakthythasan

Sakthy Sakthythasan

ஈழத்து ஓலம் காத்தடிக்குது கொப்புகள் ஆடுது இலைகள் விழுகிது மரமோ சிலிர்க்கிது பூக்களும் உதிருது குருவிகள் பதுங்கிது வாழை இலைகள் கிழிஞ்சு தொங்குது கிடுகுக் குடிசையின் கூரைகள் பறக்குது மழையின் ஈரம் பட்டு மனுசன் எழும்பிறான் ஆடு நனையுது அந்தரப்பட்டு ஓடுறான் மரத்தடியில ஆட்டைக் கட்டீட்டு பெருமூச்சு விடுறான் மண்நில குடிசையின் நிலம் சேறாய் மாறுது எடியேய் நிலத்தை மெழுகுவோம் வாடி சத்தமாய்க் கூவி மனுசியை எழுப்புறான் நனைஞ்ச பாயைச் சுருட்டி கொட்டாவியோடு எழும்பிறாள் அப்பா நித்திரை வருகிது சிணுங்கும் பொடியன் மழைத்தண்ணியைப் பிடிச்சு வாயில ஊத்திச் சிரிக்கிறான் தேத்தண்ணிக் கடையில ரேடியோ கத்துது உரிமை கேட்டுத் தலைவன் போராட்டம் விளக்குமாத்தால் தண்ணியை தள்ளும் மனிசி சாரத்தை மடிச்சுக்கட்டி கூரைக்கு கிடுகைத் தேடும் மனுசன் விடுதலையா ? அது என்ன விடியாத இரவின் நுனியில் விளங்காத பெடியன் விடிஞ்சால் வெளிக்குமோ ? சக்தி சக்திதாசன்