உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவரூபன் சர்வேஸ்வரி

வலைப் பூ- என் ஆசை மச்சான்-நீ வலைகொண்டு வருவாயென்று-யான் சிலையாக நிற்கின்றேன் கலையாக நீ வந்தாய்- நானும் காதல் வலை வீசிநின்றேன் வேலைக்குப் போகையிலே - உனக்கு வீண் பேச்சுத் தேவையில்லை வலை போட்டு வந்தால்த்தான்- சுளையாகப் பணம் வருமே கடலலை அடிக்கிறது- அங்கே காற்றும் பலமாய் வீசுகின்றது நடுக்கடலுக்குப் போகவேண்டும் நான் வாரேன் நாயகியே என் மனமும் அலை போல குமுறுவது புரியலையோ வலை வீசி மீனைப்பிடி- உன் வலைப்பூவுக்குள் என்னைப்பிடி பாசவலை போட்டதாலே-என் நேசவலை நீ யானாய் மோசவலை போடாமல்- என் மோகினியே விலகிநில். கலையாத என்னகத்தில் நிலையாக நிற்பாய் மச்சான் பாலைவனமாய் நிற்கின்றேன். சோலை வனமாய் வருவாய் மச்சாள் வாலைக்குமரியடி கண்னே -என்னை வளைப்பூக்குள் மடக்கிய சிறுக்கியடி கவிஞர் சிவரூபன் சர்வேஸ்வரி..✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️