உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மனோகரி ஜெகதீஸ்வரன்

மனோகரி ஜெகதீஸ்வரன்

விடுமுறை ஏந்திரக் கூடுகளாயே எம்மவர் இயக்கம் தந்திரம் செய்தே வீழ்த்தும் வேலைப்பளுவும் மயக்கி மந்திரச் சொல்லும் மாறையே செய்யும் மழுங்கிடத் தயக்கத்தையே எய்யும் காவு திறனற்று உணர்வும் ஓயும் களைப்புற்று மெய்யும் சாயும் கடினமும் கண்களில் புகும் மாட்டியே விழிப்போம் மத்தளம் போன்று மனதிலே மகிழ்வு அகன்று இரக்கமற்றே குடையும் இவ்வாறு நடைமுறை இதனைச் சீராக்கம் செய்யவருமே விடுமுறை வந்தால் விடுமுறை வாசலும் விரியும் சுந்தர நிகழ்வுகளைச் சுகிக்கத் தூண்டும் சொந்தங்களும் இணையும் சொற்பலவும் உலவும் சந்தச் செறிவால் சமரசம் நிலவும் நொந்த இதயத்தின் நோவும் சுருங்கும் உறவுச் சீண்டலால் சோர்வும் மறையும் மறந்தும் போகும் மனது பட்டவலி பறக்கும் உடலும் பரவசம் முற்றி இறக்கை கட்டி மீண்டெழும் மிடுக்கும் பிறக்கும் புறத்திலும் பிற்பல புதுமைகள் மனோகரி ஜெகதீஸ்வரன்