உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

தலையீடு இலவசமாக கிடைக்கும் இடைஞ்சல் தந்திடும் இதனால் பலரின் இதயம் நொருங்கிடும் குடும்பச் சண்டை கொஞ்ச நேரம் குறுக்கிடும் கூனியால் குழம்பும் குவலயம் நன்மை என்று நாமும் நினைத்து நாடி ஓட நாணயம் பேசி தன்னை மறந்து தலைவர் ஆகியும் தலையைக் நுழைத்து தன்மானம் இழக்காது அவனவன் வேலையை அவனவன் பார்ப்பான் அடுத்தவன் ஏனோ அவசர நுழைவு தவமான வாழ்வில் தன்னிறைவு வேண்டும் தலையீடும் இல்லையேல் தரமாகும் வாழ்வு உன்னைப் போலவே உலகினை நேசி உண்மை விளங்கும் உள்ளிடும் போதே அன்பில் அகிலம் அரண்டு போக ஆறுதலாய் இருப்போம் அடுத்த தலைமுறைக்கு! கமலா ஜெயபாலன்