உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-228 விருப்புத் தலைப்பு ! “கரும்புலி “ தாயக நாட்டிற்கும் தன்இன பிறப்பிற்கும் தானமாய் உயிர்ஈந்த தன்னலமற்ற உடன்பிறப்பே ! தீயகொடுமை தனை தீயிட்டுக் கொழுத்திட தீரா வேட்கை கொண்ட தியாகச் செம்மலே ! காயம் கை காலன்று கருகிய உடலாகக் கருமருந்துக் குழிக்குள்ளே கரைந்த உயிர்களே ! தூய மனத்தினில் துளிர்விட்ட நாட்டுப்பற்றில் துணிந்து போர்க்களம் ஏகிப் பொருதித் துடித்து மரணமே ! கானகத் தோட்டத்தில் கரும்புலிக் கூட்டங்கள் காணும் இடமெங்கும் கன்னிமானாய் ஓடிடும் ! ஊனதை உண்டிட ஒடியே ஒருகூட்டம் ஊடுருவி வந்தங்கே உயிர் குடித்துச் செல்லுமே ! வீணது உடலங்கு விடுதலைப் புலியாகி வாழ்வது நிலையாது வாடிப் பொசுங்கியதே ! மானமுள்ள மறத்தமிழன் மண்ணிற்காய் உயிரீந்து மக்களுக்காய் உடலீந்து மரணித்துப் போனானே ! கரும்புலி கால்சுவடு காணாமல் போனாலும் கனவோடு விதைத்தது கருவாகி முளைக்குமே ! இரும்பு நம்பிக்கை இதயத்தில் மலருதே இனிக்குது கரும்பாக இக்கணத்தினுள் தமிழாகி உருண்டு உடலில்லை உயிருண்டு உறுப்பில்லை உணர்வுகள் துடிக்குதே உயிர்தந்த நாட்டுக்காய் இருந்தாலும் ஆயிரம்பொன் இறந்தாலும் ஆயிரம்பெண் இதயத்தில் கரும்புலிகள் இறுதிவரை வாழ்ந்திடுமே ! அபிராமி கவிதாசன் 11.07.2023