உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்:227 04/07/2023!செவ்வாய் “திருநங்கை” —————— இறைவன் தந்த அமைப்பு இதுவும் அவனின் படைப்பு குறைய வேண்டும் தவிர்ப்பு குவலயம் காணும் சிறப்பு! தந்தை தாய்மன வெறுப்பு தரணியில் நீயேன் கறுப்பு நிந்தை செய்பவர் முன்பு நிச்சயம் காட்டுன் எதிர்ப்பு! ஒதுக்கும் மக்கள் குறைப்பு ஓரிருவர் மட்டும் நகைப்பு எதற்கும் காட்டுன் எதிர்ப்பு எளிதாய் விலகும் தவிர்ப்பு! முன்னேறிய நாட்டு அமைப்பு முக்கிய பதவியில் இருப்பு கண்ணுற்ற வேளை சிறப்பு கலங்காதே கிடைக்கும் வனப்பு! உன்னில் என்னவில்லை செப்பு ஊருக்கு தெரியுமுன் மதிப்பு எண்ணில், நீதிதான் மறுப்பு ஏற்றம் கொண்டுவர விருப்பு! நன்றி மதிமகன்